அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


21 ஆகஸ்ட், 2014

வெக்கக்கேடு

சாராயம் விற்றுக்
காசாக்கும்
அரசும்/

கல்வியை விற்றுக்
காசாக்கும்
வனிகர்களும் /


மேகம்

எடுத்ததைக்
கொடுத்து விடும்
நேர்மையாளன்.

வானில்

நிலா வீட்டில்
குடிபுகக் காத்திருக்கும்
நட்சத்திரங்கள்

விடலை--

அவன் ---
அவள்---
காதல்---
நம்பிக்கை---
காமம்---
வடிதல்---
கரைதல்---

அலை

ஓயாத அலைகள்
கடலிலும்
அவள் மனதிலும்.

2 ஆகஸ்ட், 2014

மகரந்தம்-

மொட்டு
விரியும்போது
காதல்
மலர்கிறது/
காமம்
கடக்கும்போது
காதல்
மணக்கிறது/
வெளிச்சம்-
---------------
உனக்கும்
எனக்கும்
தெரியாததொன்று
நமக்குத்
தெரிந்திருக்கிறது/
வெறுமை.
--------------
உன்
வருகைக்காக
காத்திருந்து
காத்திருந்து
எனதிரு
இமைகளும்
சுமைகளானது.