அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


28 பிப்ரவரி, 2015

எத்தனை காலம்?
-----------------------
ஏமாற்றம்தான்
ஏமாற்றம்தான்/

எத்தனை வீரியம்
எத்தனை கலிப்பு
எத்தனை கலைப்பு
எத்தனை இழப்பு?

எல்லாம்
எல்லாம்
கிணற்றுக்குள்
விழுந்த கல்லாய்/

இன்னும்
எத்தனை காலம்?
கனல்
--------
புதைந்து போன
நினைவுகளும்
புதைக்கப்பட்ட
உணர்வுகளும்
புடைத்துக்
கொண்டே
இருக்கும்
வெடித்து
வெளியே வர/
கசிவு
--------
கசிகிறது
கசிகிறதென்று
கதை லதையாய்க்
கதைக்கிறார்கள்
இறுகிய
இதயம் படைத்தோர்
உண்மையில்
கசிவது
அணைக்கட்டிலல்ல
தேசிய
இணைக்கட்டில்.

23 பிப்ரவரி, 2015

அன்னா ஹசாரே
-------------------------
நரேந்திர மோடியின் மைய அரசு.நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் நிரைவேற்ற முயற்சிகளத் தீவிரப்படுத்தியுள்ளது.அது நிலம் கையகப்படுத்தும்  செய்கை என்பதை விட அப்பாவி.ஆதிவாசி,மற்றும்.தலித்.அடித்தட்டு மக்களின் நிலங்களை பறித்து கையகப்படுத்தும் செய்கையென்றே சொல்ல வேண்டும்.
சாதாரன மக்களின் வாழ்வை  சீர்குலைத்து.அந்த இடங்களில் பெரிய பெரிய முதலாளிகளின் தொழிற்சாலை அமைத்தல் என்பது எவ்விதத்திலும் ஏற்கமுடியாததாகும்.அந்த நிலங்களுக்கு அரசு கொடுப்பதாகச் சொல்லும் விலையும்.பிச்சைக் காசுபோல் அய்யாயிரம் பத்தாயிரம் என்று அந்த மக்களே சொல்கிறார்கள்.இது அரசே தன் மக்களின் வாழ்வை அழித்து அவர்களின் நிலங்களைத் திருடும் செய்கையாகும்.இந்த சட்டத்தை.அகில இந்திய காங்கிரசும்,ஆம் ஆத்மி, கட்சியும்.அய்க்கிய ஜனதா தளம்,கட்சி.இரு கம்யூனிஸ்ட்.கட்சிகள் என்று பெரும் கட்சிகள் எல்லாம் எதிர்க்கின்ற நிலையிலும் மோடியின் அரசு இந்த ஆதிவாசி,தலித்,அடித்தட்டு மக்களின் வாழ்வை அழித்து  அவர்களின் நிலங்களை பெரு முதலாளிகளுக்கு பறித்துக் கொடுக்க முயற்சிக்கிறது.இன்நிலையில்.யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் மீண்டும் அன்னா ஹசாரே அவர்கள் போராட்டக் களமிரங்கியுள்ளார்.திரு அன்னா ஹசாரே அவர்களின் கடந்த காலப் போராட்டங்களில்.நாடகங்களும்,பன்னாட்டு முதலாளிகளின் நலமும் இருந்ததால் அந்தப் போராட்டங்கள் சில நேரங்களின் விமர்சனத்திற்கு ஆளானது உண்மையேதான்.அவர் இதுவரை சாதாரன அடித்தட்டு.தலித் மக்களின் வாழ்வியல் போராட்டத்திற்கு குறல் கொடுக்கவோ போராடவோ இல்லை என்ற கண்டனங்கள் பரவலாக எழுந்த நிலையில் திரு அன்னா ஹசாரே அவர்களின் இந்த இரண்டுநாள்[பிப்ரவரி.23.மற்றும்.24.தேதியின்]போராட்டம் கவனிக்க வேண்டிய போராட்டமாக வடிவெடுத்துள்ளது.பாதிக்கப்பட்டுள்ள ஏழை ஆதிவாசி.தலித்,மற்றும்  அடித்தட்டு மக்களின் எழுச்சியை அன்னா ஹசாரே உருவாக்கியுள்ளார்.ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன்.பல்லாயிரக்கணக்கான மக்கள் பல நாட்களாக நடைப்பயணமாகவே டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திடலை நோக்கி அணிதிரண்டு வருகிறார்கள் சிருவர்முதல் வயதான பெரியவர்கள் பெண்கள் என்று அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வருவது பார்க்கும் போது தன் மண்ணை எக்காரணம் கொண்டும் இழக்க மாட்டோம்.என்கிற ஒரு புரட்சிப் புயல் அவர்கள் மனதில் இருப்பது அவர்களின் முகத்தை பார்க்கும் போது தெரிகிறது.பஞ்சை பராரிகளாக.சரியான உடையோ.காலணிகளோ கூட இல்லாத.அந்த ஏழைகளின் நிலத்தை மோடி அரசு அபகரித்தால் அது  மோடியின் அரசையே புரட்டிப் போடும் வெறி அவர்களின் முகத்தில் தென்படுகிறது.மக்களின் கோபத்தை ஒருங்கிணைத்து அவர்களை லட்சக்கணக்கில் அணிதிரட்டும்  அன்னா ஹசாரேயின் வல்லமையை பார்த்து மோடியே ஆடிப்போய் விட்டது போல்த்தான் தென்படுகிறது. அன்னா ஹசாரே அவர்களுக்கு சல்யூட் அடித்தே தீர வேண்டும்.அவரின் இந்த போராட்டத்தை இடையிலேயே கை விட்டு விடாமல் மக்களின் மன எழுச்சிக்கு சரியான போராட்ட வடிவம் கொடுத்து.அந்தஅப்பாவி  ஆதிவாசி.தலித்,அடித்தட்டு மக்களின் நிலங்கள் அரசாதிக்கக் கொடுங்கரங்களால் பிடுங்கப்படாமல்.காப்பாற்றப் பட வேண்டும்

4 செப்டம்பர், 2014

விழி.

அகவிழி மூடி
ஆழ்ந்த
துயில் கொண்டால்
வாழ்வில்-துகள்
மண்டிப்போகும்.

21 ஆகஸ்ட், 2014

வெக்கக்கேடு

சாராயம் விற்றுக்
காசாக்கும்
அரசும்/

கல்வியை விற்றுக்
காசாக்கும்
வனிகர்களும் /