அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


30 ஜூலை, 2014

அச்சம் தவிர்.
-----------------
செருப்பை
கையிலெடுக்கச்
சொன்னால்
கையிலெடு
ஆனால்
அச்சப்பட்டல்ல/
கரிப்பு.
---------
நீதான்
விதைத்து விட்டுச்
சென்றாய்/
இன்று
வேர் விட்டு
வளரும் போது
வெண்நீரை
ஊற்றி விட்டு
விருவிரென்று
செல்கிறாயே/

27 ஜூலை, 2014

இதம்

உன்
காலணிகளை
கலற்றிவிட்டு நட
ஒரு இதமான
மென்மையை உணர்வாய்/

நீ
நடந்து கொண்டிருப்பது
என்
இதயத்தில்/

26 ஜூலை, 2014

புகைச்சல்

எரிகிறது வயிறு
வெற்றிடமாய்
அடுப்பு/

தப்புதான்.

போனது தப்புத்தான்
எம் தலைவர்
எழுச்சித்தமிழர் திருமா
போனது தப்புத்தான்
எம் மக்களின் சொத்துக்கள்
கொள்ளையடிக்கப் பட்டபோது/
எம் மக்களின் வீடுகள்
கொளுத்தப் பட்ட போது/

எம் மக்கள
கொல்லப் பட்ட போது/
எம் இனப் பெண்கள்
வன்புணர்வு செய்து
கொல்லப் பட்டபோது/
இவர்களும் தமிழர்கள்தான்
என்றிவர்களுக்காக
போராடாத/
உண்ணாநிலை
இருக்காத/
தமிழீழ மக்களுக்காக
மட்டுமே போராடும்
சாதி ஈனர்கள்
போராடுமிடத்திற்கு
எம் தலைவர்
போனது தப்புத்தான்/


கொள்வாயா?


எனை கொள்வதும்
கொல்வதும்
உன்னிடம்தான் உள்ளது
சொல் எனை நீ
கொள்வாயா
கொல்வாயா?

கானல் நீர்

இமைச் சிறகுகளை
இறுக மூடிக் கொண்டு
துயில்க் கனவிலேனும்
வயிரு நிரைய உணவும்
மனது நிறையும் உடையும்
மழையில் நனையா வீடும்
வருமா என்ற ஏக்கத்தில்
வானக் கூரையின் கீழ்
வாடிக் கிடந்தான் பலரில்
ஒருவானாய்யவனும்

வேடமனம்.

வில்லில் அம்பு தொடுத்து
விரல் வழியே எய்திவிட்டு
விழுமா இரையென்றுதான்
வின்பார்த்துக் காத்திருக்கும்
வேடனின் மன உலைச்சல்/

இரைகேட்கும் கும்பிக்காக
இரைதேடி வான் வழியே
சிறகடித்துப் பறந்து செல்லும்
சின்னஞ் சிறு பறவைகளை
இரையாக்கிக் கொள்ள எண்ணும்
என்ன இனம் மனித இனம்?

அவள்.

பதைப்புடன்
செல்லவில்லையவன்
பலரின் வெருப்பு
வேண்டாமென்றுதான்
மருத்துவமனை சென்றான்/

மூன்று நாள் உண்ணாத
பசி மயக்கத்திலவள்
என்பதையறிந்து
அந்த நொடியில்
மனம் உறுத்தியதவனுக்கு/

எப்போதும்
தன்னை ஏசுகிறாள்
வெட்டியாய் ஊர் சுற்றும்
தண்டச் சோறென்று/

கோபத்தில் அடித்து விட்டு
வெளியேறிக் குடித்து விட்டு
மூன்று நாட்கள்
வீடு வராமல்
அக்கா வீட்டில் சாப்பிட்டான்/

இருந்தும் உண்ணாமல்
இமைமூடிக் கிடக்குமவள்
முகம்பார்த்து
தலை குனிந்தான்/


24 ஜூலை, 2014

இழிவு.

பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது இழிவே
அதே நேரத்தில் தனது வாக்குகளை பணத்திற்காக
விற்கும் நிலையில் மக்களை வைத்திருப்பதும்
ஆண்ட,ஆளும்,அரசுகளின் இழிவே/

23 ஜூலை, 2014

மநுவை மிதி.

காட்டில் நிலத்தில்
உழுபவன் கோவணம்
மண் வாசணையடிக்கும்
உழைப்பின் மகத்துவம்
உடலை உயிர்க்கும்
வணங்கினாயா--நீ

கோவணம் கட்டி
சடை முடி வளர்த்து
மூச்சை முட்டும்
நாற்றமடிக்கும்
காவி உடைக்குள்
காமம் வளர்த்து
உழைப்பை மறுக்கும்
உழுத்தர் கூட்டத்தை
வணங்குகிறாய்-- நீ
மநுவை மிதி
மனிதம் மதி.

புகை.

புகை
மக்களுக்கு பகை
நகை
மக்களுக்கு மிகை.

மறைவிடமல்ல

வா
------
உரைவிடமென்பது
மறைவிடமல்ல
எழுந்து வா
எதிர்நீச்சல் போடு
எம்மினம் காக்க
எவர் வருவார்
என்றேங்கும்
நம்மவர் மகிழ
நமையன்றி யார்
நமக்காக உழைப்பார்?