அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


15 ஜனவரி, 2011

புளிய மரமும் என் அம்மாவும்..

அந்தப் புளிய மரம்
கண்மாயின் வெளிப்பக்க
கரையின் உள்ளே
வேர்கள் புதைந்து
நீர் உறிஞ்சி
சத்து சேகரித்துக் கொடுத்து
வளர்த்த அந்த
புளிய மரம்
வளர்ந்து பெரிதாகி
கிளைகள் பரப்பி
கிளைகள் சரியச் சரிய
புளியம் பழங்களுடன்
கிழே படர்ந்த நிழல்
மரத்தைச் சுற்றியும்
மேடு மேடாய்
ஒடுக்கப்பட்டவர்களின்
உடல்கள் புதைக்கப்பட்டு
மரத்தில்
பழம் பிடுங்கும்
மேட்டிமைக் கைகள்
நீண்டு வலைந்த
புளியம் பழங்களுக்குள்
சுலையாகவும்
சத்தாகவும்
என் அம்மாவும்.