அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


26 மார்ச், 2013

திரு சீமானும்.அவரின் தொண்டர்களும்.
------------------------------------

திரு சீமான் அவர்கள் தமிழீழ மக்களின் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்து அரசியல் ஆர்வளரானவர்.ஆரம்பத்தில் தந்தை பெரியார்.தொண்டர்களுடனும்.தலைவர் திருமா அவர்களுடனும் இணைந்து மேடைகளில் பேசி தன் தமிழ் உணர்வை காட்டினார்.அதன்பிறகு ஈழப் போர் ஓய்ந்த பின் திடீரென்று தனி அமைப்பு தொடங்கி.நாம் தமிழர் என்னும் பெயரும் வைத்து செயல்படுகிறார்.அதில் யாருக்கும் கருத்து முறன் இல்லை.ஆனால் அவர் தன் தொண்டர்களுக்கு சரியான வழி காட்டி செயல்படச் செய்யும் நிலையிலிருந்து தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.குறிப்பாக.தலைவர் திருமா அவர்களைப் பற்றி திரு சீமான் அவர்கள் எங்கும் தவறானமுறையில் விமர்சிப்பதில்லை.ஆனால் அவரின் தொண்டர்கள்?தலைவர் திருமா அவர்களை மிக அருவருப்பாகவும் அசிங்கமாகவும் விமர்சிக்கிறார்கள்.அதை திரு சீமான் அவர்கள் கண்டிப்பதாகவும் தடுப்பதாகவும் தெரிய வில்லை.தமிழீழப் பிரச்சினையில் அனைவருக்கும் பொதுவான எதிரி ராசபக்சே.என்பதும் ராசபக்சேயை எதிர்ப்பதையும் அந்த கொலைவெறியனுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள் என்ன?அதற்கான வழிமுறைகள் என்ன?என்பதை தமிழீழ ஆதரவாளர்கள் செய்ய வேண்டும்.தமிழக[சாதீய]சூழலும் நான் பெரியவனா,நீ பெரியவனா?என்பதும்.அனைவரும் இணைந்து செயல்படும் சூழல் இல்லாமல் போனது.கேவலமான உண்மை.இந்தநிலையில் அவரவரும் வெவ்வேரு தடத்தில் இருந்து இயங்கினாலும்.நோக்கமும் இலக்கும் ஒன்று என்பதை உணர்ந்து செயல்படுவதுதான் ஒரு போராட்டத்தின் வெற்றியிலக்கை சென்றடைய வழி வகுக்கும்/ஆனால் திரு சீமானின் தொண்டர்கள்? இதை உணர்ந்துள்ளதாக தெரியவில்லை.அவர்களின்,தலைவர் திருமா எதிர்ப்பு என்பது சாதிய காழ்ப்புணர்ச்சியின்பால் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகுறது.அதை தடுத்து தன் தொண்டர்களுக்கு சரியான முறையில் எடுத்துச் சொல்லி அவர்களின் போராட்ட இலக்கை தமிழீழ எதிரி ராசபக்சே பக்கம் திருப்ப வேண்டிய கட்டாயத்தை உணர வேண்டும் இல்லையேல்.திரு சீமான் அவர்கள்.தான் தலைவர் திருமா அவர்களை ஒன்றும் விமர்சிக்காமல்.தன் தொண்டர்களை தூண்டிவிட்டு இழிவாக விமர்சிக்க வைக்கிறாரோ என்ற அய்யத்தை தோற்றுவிக்கிறது.தன் தலைவர்.சீமான் அவர்கள் விமர்சிக்காத நிலையில் நாம் ,தலைவர் திருமா,அவர்களை விமர்சிக்கக் கூடாது என்ற பொது அறிவை திரு சீமானின் தொண்டர்கள் பெறவேண்டும்.அந்த பொதுஅறிவை தன் தொண்டர்களுக்கு சீமான் அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.தன் தொண்டர்களுக்கு சரியான இலக்கை காட்டி தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும் சீமான் அவர்கள்.அதை தலைவர் திருமா அவர்கள் மிக சரியாகச் செய்கிறார்.தன் தொண்டர்களை தன் தம்பிகளாக இதயத்தில் வைத்து அவர்களுக்கு சரியான வழிகளைச் சொல்லி தெழிவான முறையில் வழி நடத்துகிறார்.இல்லையேல்.இன்று சாதி வெறியர் ராமதாசின் தீ,ய வெறியாட்டத்திற்கு.தமிழகத்தையே நெருப்புக் களமாக்கி இருப்பார்கள் சிறுத்தைகள் அதைத் தடுத்து தமிழகத்தை அமைதி சூழலுக்குள் வைத்துள்ளார் தலைவர் திருமா.இந்த பண்பை திரு சீமான் அவர்கள் பெற்று தன் தொண்டர்களை தன் கட்டுக்குள் வைத்து நெறிப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும்.அல்லது திரு சீமானின் தொண்டர்களின்,தலைவர் திருமா,மேலான இழிவான எதிர்ப்பு திரு சீமானுக்கும் உடண்பாடானதுதான் என்றால் அதை அவர் அறியப்படுத்துவது நல்லது.அதன் பிறகு சிறுத்தைகளின் செயல் வழியறிய அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

8 மார்ச், 2013

படை திரள்
-------

படைதிரண்டு
நடை போட்டால்
தடை விழகும்
அன்று
பாராளும் வாய்ப்பு
நம் முன்
அணி திரளும்.

7 மார்ச், 2013

ஆசை
-------
வலையொலியின் மொழியறிந்து
மகிழ்ந்திட ஆசை-அந்த
மொழியிசையின் சுகமறிந்து
ரசித்திட ஆசை/

விழியசைவின் திசையறிந்து
நடந்திட ஆசை-அதன்
திசையறிந்து சுகமடைந்து
வாழ்ந்திட ஆசை/

2 மார்ச், 2013

வலையொலியின் மொழியறிந்து
மகிழ்ந்திட ஆசை--அந்த
மொழியிசையின் சுகமறிந்து
ரசித்திட ஆசை/

விழியசைவின் திசையறிந்த
நடந்திட ஆசை--அதன்
திசையடைந்து சுகமடைந்து
வாழ்ந்திட ஆசை/