அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


16 அக்டோபர், 2010

தங்கர்பச்சானின் இன்றைய உள் அரசியல்!!!

சமீபத்தில் மும்பைத் தாராவி பகுதியில் நடைப்பெற்ற நாம் தமிழர் அரசியல் கட்சியின் கூட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகருமான திரு. தங்கர் பச்சான் அவர்கள் மீண்டும் ஒரு முறை தனது உணர்ச்சி பூர்வமான தமிழ்வுணர்வை பொங்கி பாயவிட்டுள்ளார்.

இந்திய தமிழகத்தின் பல நூறு தமிழ் மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், அடித்தும் இந்தியாவின் எசமான நாடான இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டும் பல லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து கொடுமைப்படுத்தியதை தடுக்க இயலவில்லை. பல்லாயிரக்கணக்கான நம் தமிழ் அக்கா, தங்கைகளை பாலியல் வன்புணர்வு செய்து தன் அப்பா, அண்ணன், தம்பிகளுக்கு முன்னாலேயே உடை கலைந்து வெற்றுடம்புடன் நடமாட வைத்து கொடுமைப்படுத்திய கொடுங்கோலன் இனவெறியன் ராசபக்சேயின் அட்டூழியத்தையும், அடக்குமுறையையும் தடுத்து நிறுத்த முடியாமல் போனது உண்மையே. காரணம் உலகத் தமிழினமே கண்ணீரில் துடித்துக்கொண்டிருந்த போது தாய் தமிழகத்தில் அந்த சோகமான நேரத்திலும் கூட போராட்டக்காரார்களை ஒருங்கிணைப்பதில் போட்டியும், பொறாமையும் தங்களில் யார் பெரியவர் என்கின்ற மனப்போக்கிலும் அத்தோடு அந்த தமிழ் உணர்வாளர்களுக்குள்ளும் உரைந்து கிடக்கின்ற சாதிவெறியும் தான் காரணம் என்பதை சிந்தனையாளர் உலகம் நன்றாகவே அறியும்.

ஒரு வேலை "படையாச்சி" படமெடுத்த தங்கர்பச்சான் அவர்களுக்கு தெரியாதோ என்னவோ ? இல்லையேல் அப்போது நடைப்பெற்ற ஈழ ஆதரவு போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் திரு. திருமாவளவன் அவர்களின் போராட்ட எழுச்சியை சரியாகப் பயன்படுத்தி அவருக்கு துணையாக இவர்கள் நின்றிருந்தால் தமிழக அரசே கூட தன் நிலையை மாற்றி மைய அரசை அடிபணியவைத்திடக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும் அது நடக்காமல் போனதிற்கான காரணம் வீரியத்துடனும், உளப்பூர்வமாகவும், எழுச்சியுடன் போராடிய திருமா அவர்கள் ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவர் என்பது தான். இதை தங்கர்பச்சான் அவர்களும் அறிந்திருக்கக்கூடும் தமிழர்கள் போராட்டம் கூர்மழுங்கிப்போக காரணம் தமிழ்ர்கள் பல அரசியல் கட்சிகளாக பிரிந்திருப்பது தான் என்று கவலைப்படும் தங்கர்பச்சான் அவர்கள் இதைக் கூறியுள்ளதும் நாம் தமிழர் எனும் அரசியல் கட்சிமேடைதான்.

இனி தமிழர்கள் தன் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரிடவேண்டும் என்று தானும், தனது இரண்டு மகன்களுக்கும் தமிழில் பெயர் மாற்றம் செய்யவதாக கூறியுள்ளார் நல்ல முடிவுதான் ஆனால் ஏன் இத்தனைத் தாமதம். நாம் தமிழர் அரசியல் கட்சியில் மேடை கிடைத்த பிறகு தான் இந்த எண்ணம் தோன்றியதோ... இதற்கு முன்னால் திரு. திருமா அவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு தன் தந்தை உட்பட தமிழில் பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தாறே.. அந்த நேரத்தில் தங்கர் பச்சான் அவர்களுக்கு தன் மகன்களுக்கு தமிழ் பெயர் வைக்க தோன்றாமல் போனதே ஏன்?அப்போது தமிழ் பெயர் மாற்றம் செய்தது திரு. சீமானாக இல்லாதது திருமாவாக இருந்தது காரணமோ..

இவ்வளவுக்கும் திருமா அவர்கள் தங்கர்பச்சான் அவர்களுக்கு விருதும் கேடயயும் வழங்கி சிறப்பித்தாரே தமிழர்கள் பல அரசியல் கட்சியாக பிறிந்து இருக்காமல் ஒரே அணியாக இருந்தால் மட்டும் போதாது அவர்கள் தங்கள் மனதில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் சாதி உணர்வையும் தீண்டாமை எண்ணங்களையும் முதலில் விட்டொழிக்க வேண்டும் முடிந்தால் தங்கர் போன்றவர்கள் அதற்கு முயற்சிக்க வேண்டும் முதலில் தன் மனதில் இருந்து அதை அகற்றிவிட்டு...

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த கட்டுரையில் நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் திருமா என்பவர், இலங்கையில் ராஜபக்ஷே வின் விருந்தளிப்பில் பங்கு பெற்றவர் தானே? சும்மா ஒரு சந்தேகம்.. - அன்வர்ஷா

கவிமதி சொன்னது…

அது திருமாவுக்கு கொடுக்கப்பட்ட விருந்து அல்ல...குழுவில் போனவர் தனியாக நாயர் கடை தேனீரும்,முணியாண்டி விலாஸ் சோறும் திண்ண முடியாது என்று கூறி அன்வர்ஷாவின் சந்தேகத்தை தீர்க்கிறேன்...

திருமாவை விடுங்கள் அவர் எங்கிருந்தோ வந்தவர். அங்கேயே இருக்கும் உங்கள் முஸ்லீம் அமைப்பினர் ராஜபக்க்ஷே வின் காலை நக்கிக்கொண்டிருப்பதாக எனக்கு சும்மா ஒரு சந்தேகம்...

சவுக்கடி சொன்னது…

ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டி தமிழக மக்கள் போராடிய போது கருணாநதியின் கமுக்கக் கையாளாகத் திருமாவளவன் செயற்பட்டதும், இன்னும் கூட அவ்வாறே செயற்பட்டுக்கொண்டிருப்பதும் ஊரறிந்த செய்தியல்லவா?

கவிமதி சொன்னது…

கருணாநதியின் கமுக்கக் கையாளாக இருப்பவரா அவரை எதிர்த்தே அறிக்கைவிடுவதும், அரசியல் நடத்துவதுமாக இருக்கிறார்.பேசுவதில் ஒரு நேர்மை வேண்டாமா சவுக்கு...

அழகன் மணி சொன்னது…

தோழர் அன்வர்ஷா அவர்களே..
திருமா என்பவர் அவர்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காவும், தாங்கள் சார்ந்துள்ள சிறுபான்மையின மக்களுக்காவும் சேர்த்தே தன்னலம் கருதாது அயராது உழைக்கும் அதே திருமா தான் அய்யம் வேண்டாம். தங்களைப் போன்றோர் நினைப்பது போல் இலங்கை சென்று கொடுங்கோலன் ராசபக்சேவுடன் விருந்துண்டதும் இல்லை அதற்க்காக அவர் அங்கு செல்லவும் இல்லை அந்த பயணத்தின் நோக்கம் தங்களைப் போன்றோருக்கு புரிய வாய்ப்பில்லை என்றாலும் ஒரு வேண்டுகோலாக வைக்கின்றேன். இலங்கை சென்று வந்த பிறகு ஜீனியர் விகடன் இதலில் எழுதிய தொடர் முல்வலி நூலாகவும் வந்துள்ளது அதைப் படிக்கவும். அந்த பயணத்தின் நோக்கத்தை இழிவு படுத்தி உள்நோக்கம் கற்பிக்கும் செயலை பலர் செய்கிறார்கள் அந்த முதலை மனிதர்களில் நீங்களும் ஒருவர். ராசபக்சேவை சந்தித்து நீங்கள் ஒரு பெளவுத்தர்.பெளத்தம் கருனையின் அடையாளம் அந்த கருணண உங்களிடம் கிடையாது என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிவிட்டு வந்தவர் எழுச்சித் தமிழர் திருமா அவர்கள் முடிந்தால் நுனிப்புல் மேயாமல் முழுத்தகவலை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். காழ்ப்புணர்ச்சி பொது அறிவுக்கு பெரும் தடைக்கல் எனவே தடைக்கல்லை உடைத்து பொது அறிவை வளர்க்க முயற்சிக்கவும். சும்மா ஆலோசனைக்காக அல்ல உண்மை அறிவுறைதான்.

அழகன் மணி சொன்னது…

சவுக்கு

தன் நினைவற்றது
தன்னாற்றலற்றது
தன் சிந்தனையற்றது
யாருடைய கையில் கிடைக்கிறதோ
அவர்கள் சுழற்சிக்கேற்ப
சுழலுவது
ஏனென்றால்
சவுக்குக்கு
தன்னுணர்வுகிடையாது..